நாம் ஏன் பிறந்தோம்
ஏன் சேர்ந்தோம்
அறியமாட்டோம்
நம்மைச் சுற்றி இயங்கக்கூடிய
இந்த உலகம்.....
ஏன் இத்தனை பரபரப்பு?
அறியமாட்டோம்
எங்களுடைய பயணத்திற்கு
ஏன் இத்தனை பாதுகாப்பு
அறியமாட்டோம்
இன்றளவும் அறியமாட்டோம்
எங்களை படைத்த காரணத்தை
ஆனால் அடுத்தப் பயணத்திற்கு
ஆயத்தமாகிவிட்டோம்
ஆஹா, இந்த பயணம் தான்
எத்தனை ஆனந்தமானது
வேகமாய்....
விண்ணில் பாய்ந்து.....
காற்றைக் கிழித்து.....
ஒளியைப் பிளந்து....
அலறல் சத்தம்
விழித்துப் பார்த்தால்
பூமிக்குள் செயற்கையாய் ஒரு
பூகம்பத்தை ஏற்ப்படுத்தியவர்களாக....
எத்தனை காதலைக் குடித்திருப்போம்?
எத்தனை கனவுகளை நசுக்கியிருப்போம்?
எத்தனை நம்பிக்கைகளைத் தளர்த்தியிருப்போம்?
ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையை உருவாக்கியதைத்தவிர
வேறு எதைச் சாதித்திருக்கிறோம்?
அழிக்கத்தான் பிறக்கிறோம் என்று
ஆக்கத்திலேயே தெரிந்திருந்தால்
எங்களை உருவாக்கியவர்களை முதலில் அழித்திருப்போம்
ஆயுதக்கிடங்குகளும், ஆயுதத்தொழிற்ச்சாலைகளும் விபத்துக்குள்ளாவது
இந்த உண்மையை அறிந்து தானோ?
ஜம்ஷீது,
காங்கோ,
19/10/08.
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
நல்லக் கருத்து ஜம்ஷீத்..
தொடர்ந்து எழுதவும்..
Post a Comment