Tuesday, December 2, 2008

முதிர் கன்னிகள்

கண்கட்டி ஆடத்தான்
காலம் எனை அழைத்தது
கண்கட்டைக் கைமாற்ற
காற்றினிலே துழாவுகிறேன்
நெடு நாட்கள் காத்திருந்தே
கிட்டுவதற்க்கில்லை எவரும் இங்கே
கட்டவிழ்த்துப் பார்க்கையிலே
என் நிழல் மட்டும் தனிமையிலே
கால்கட்ட வழி இல்லை
கண்கட்டிப் பழக்குகிறது காலம்

ஜம்ஷீது,
Castoro II,
Gabon,
29/10/2008.

1 comment:

ச. சிவராம் குமார் said...

அருமை.. பின்றீங்க