மங்கையிவளது விரல்
நேற்று பெய்த மழையில்
முளைத்த புல்லோ - முகமோ
காய்ச்சிய பாலின்
பொங்கிய நுரை – சிகை
உருவமேற்ற குழலின் இசை
அலுப்பின் எதிரியே – நீ
விரக்தியின் இம்சை
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
என் கண்கள் கெட்டாலும் கனவு வரும்
கண்கள் பதித்த கவிதை – நீ
கனவுகளின் உரிமை
பாவையிவள் பாதமதை நானறியேன்
நங்கையிவள் நானங்கொண்டு;
மானாக துள்ளி, மின்னலென மறைவதனால்
வாய்மொழி கேட்கவோ, காதிரண்டு போதாது
அவள் வாய் பேசுவது பகுதி
கண்கள் பேசுவதே மிகுதி
மின்னொளிக்கும் மின்னலுக்கும் போட்டியாம்
மின்மினியே – நீ
சிரித்துவிடாதே!! மின்னலின் பெருமை
சிருமை பட்டுவிடும்
மிகைத்து க்கூறவில்லை நான்
மீத மிருக்கிறதென் பெட்டகத்தில்………
ஜம்ஷீது,
காங்கோ,
12/11/08.
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
சந்தத்துடன் கவிதை இருப்பது சிறப்பு...
Post a Comment